விடுதலை புலிகள் பிரபாகரன் படத்தால் தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு?
3 தை 2026 சனி 06:24 | பார்வைகள் : 232
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் நடைபயண அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தும், திருச்சியில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது' என காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருச்சி தென்னுார், அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில், நேற்று காலை வைகோவின் சமத்துவ நடைபயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நடைபயணம் அழைப்பிதழில் 'விடுதலை புலிகள்' பிரபாகரன் படம் இடம் பெற்றதால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இவ் விழாவை புறக்கணித்தார்.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அமைச்சர் நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலர் அருணாசலம் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கடும் விமர்சனம்
வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால், திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பது வழக்கம். நேற்று முதல்வர் ஸ்டாலினை வரவேற்க காங்கிரசார் செல்லவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கு காரணமாக இருந்த பிரபாகரன் படத்தை, நடைபயணம் துவக்க விழா அழைப்பிதழில் வைகோ இடம் பெற செய்திருந்தார். அதனால், அவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிக்கை:
ராஜிவை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என சி.பி.ஐ., சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. ராஜிவ் கொலைக்கு பின், அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என உலகம் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது; இந்தியாவிலும் தடை நீடிக்கிறது.
காந்தி படம்
அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ராஜிவ் கொலையில் முதல் குற்றவாளி. அப்படிப்பட்டவரின் படத்தை போட்டு விட்டு, காங்கிரசை அழைப்பது எப்படி நியாயம்?
ராஜிவை கொலை செய்தவர் பிரபாகரன்; தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின் மறைந்து போனார். சமத்துவம், மதச்சார்பற்ற என்ற அடையாளம் நமக்கு தேவை என்றால், அதில் காந்தி படம் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
கூட்டணி தர்மத்தை வைகோ கடைப்பிடிப்பவராக இருந்தால், பிரபாகரன் படம் இல்லாமல், வேறு அழைப்பிதழ் தயார் செய்து இருக்க வேண்டும். கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வைகோ செயல்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan