Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய கருப்பு....

ரசிகர்களை மீண்டும்  ஏமாற்றிய கருப்பு....

2 தை 2026 வெள்ளி 13:10 | பார்வைகள் : 186


ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஆனால் இந்த படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் 46வது படத்திலும் நடித்து முடித்து விட்ட சூர்யா, அடுத்தபடியாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் 47 வது படத்தில் நடிக்கத்தொடங்கி விட்டார். ஆனபோதும் இப்போது வரை கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாதது சூர்யா ரசிகர்களை கடும் அப்செட்டாக்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தையொட்டி கருப்பு படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளார்கள். அதில் கருப்பு சட்டை அணிந்தபடி கையில் பெரிய அருவாளுடன் காட்சி கொடுக்கிறார் சூர்யா. ஆனால் இந்த போஸ்டரிலும் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இடம் பெறாதது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்