Paristamil Navigation Paristamil advert login

சுவிஸ்சர்லாந்து தீ விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுக் கொள்வதாக மக்ரோன் அறிவிப்பு!!

சுவிஸ்சர்லாந்து தீ விபத்தில் காயமடைந்தவர்களை  ஏற்றுக் கொள்வதாக மக்ரோன் அறிவிப்பு!!

1 தை 2026 வியாழன் 22:55 | பார்வைகள் : 1975


சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொண்டானா (Crans-Montana) என்ற பனிச்சறுக்கு சுற்றுலா பகுதியில் உள்ள “Le Constellation” என்ற பாரில், 2025  ஜனவரி 1 அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் நடுவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. இரவு தொடங்கிய தீ, நைட் கிளப் போல் மிகுந்த கூட்டம் இருந்த இடத்தில் வேகமாக பரவி, பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 115க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தீ விபத்தாகவே கருதப்படுகின்றது; ஒரு பண்டிகை மெழுகுவர்த்தி தீப்பிடித்ததற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

இந்த பார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது, மேலும் காயமடைந்தவர்களில் ஒன்பது பிரான்ஸ் குடிமக்களும் உள்ளனர். எட்டு பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்களை பிரான்ஸ் ஏற்றுக்கொள்கிறது என ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார். மேலும் எந்த உதவியையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். காயமடைந்த மூன்று பேர் பிரான்சுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் இல்-து-பிரான்ஸ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளார், மேலும் இருவர் லியோனில் உள்ளனர். மேலும் பலர் வரும் மணிநேரங்களில் பிரான்சுக்கு மாற்றப்படுவார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்