இளையராஜா இசையில் பாடிய அறிவு மற்றும் வேடன்
1 தை 2026 வியாழன் 16:03 | பார்வைகள் : 297
அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா.முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V .ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S.நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் P.சண்முகம் – S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.'
அரிசி' படத்திற்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய 'இசைஞானி'இப்படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இசைஞானி இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டக்கரமான வாழ்வை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வெளியான பிறகு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி (2026) மாத இறுதியில் நடைபெறும் என்றும் பிப்ரவரி மாதத்தில் படத்தின் வெளியீடு இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan