2026-ல் AI துறையில் முன்னிலை பெறவுள்ள Apple - அறிக்கை
1 தை 2026 வியாழன் 15:49 | பார்வைகள் : 371
2026-ல் Apple நிறுவனம் AI துறையில் முன்னிலை பெறவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது.
Apple நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக AI துறையில் போட்டியாளர்களை விட பின்தங்கியிருந்தது.
2024-ல் WWDC மாநாட்டில் Apple Intelligence என்ற பெயரில் AI அம்சங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை பெரும்பாலும் Writing Tools, Image Playground, Clean Up, Genmoji போன்ற அடிப்படை அம்சங்களாகவே கருதப்பட்டன. மேலும், AI Notification Summaries அம்சம் பிழைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
2025 முழுவதும் Apple, AI-யில் பெரிய முன்னேற்றம் எடுக்க முடியாமல் இருந்தது.
ஆனால், The Information வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2026-ல் Apple தனது AI பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Private Cloud Compute (PCC) மற்றும் NPU-enabled chipsets மூலம் வலுவான AI அடித்தளத்தை Apple உருவாக்கியுள்ளது.
OpenAI-க்கு அப்பால், Anthropic மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
Apple-ன் AI ஆராய்ச்சி குழு பல்வேறு புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.2026 வசந்த (செப்-நவ) காலத்தில், நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்து, AI-powered Siri அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது Apple-க்கு AI துறையில் பெரிய முன்னேற்றத்தை வழங்கும் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan