Paristamil Navigation Paristamil advert login

8 ஓவரில் 78 ரன் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் - 444 ஓட்டங்கள் குவித்த எதிரணி

8 ஓவரில் 78 ரன் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் - 444 ஓட்டங்கள் குவித்த எதிரணி

1 தை 2026 வியாழன் 14:49 | பார்வைகள் : 127


விஜய் ஹசாரே தொடரில் மும்பை வீரர் சர்ப்பராஸ் கான் 157 ஓட்டங்கள் விளாசினார்.

ஜெய்ப்பூரில் மும்பை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே போட்டி நடந்து வருகிறது.

இப்போட்டியில் மும்பை அணி முதலில் துடுப்பாடியது. ரகுவன்ஷி 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 46 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

எனினும் முஷீர் கான் மற்றும் சர்ப்பராஸ் கான் கோவா பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். முஷீர் கான் 60 ஓட்டங்கள் விளாசி வெளியேற, சர்ப்பராஸ் கான் (Sarfaraz Khan) 56 பந்துகளில் சதம் அடித்தார்.

பின்னர் வந்த ஹர்திக் தாமோர் 28 பந்துகளில் 53 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் சர்ப்பராஸ் கான் 75 பந்துகளில் 14 சதங்கள், 9 பவுண்டரிகளுடன் 157 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் மும்பை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 444 ஓட்டங்கள் குவித்தது. தர்ஷன் 3 விக்கெட்டுகளும், கௌஷிக் மற்றும் லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மோசமாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) 8 ஓவர்களில் 78 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்