Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியர்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

அவுஸ்திரேலியர்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

31 மார்கழி 2025 புதன் 13:05 | பார்வைகள் : 533


அவுஸ்திரேலியர்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் பல பிராந்தியங்களில் தட்டம்மை நோய்த் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் சமீபத்தில் தட்டம்மை நோய்த் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய பயணி ஒருவருக்கு தட்டம்மை நோய் கண்டறியப்பட்டது.

தொற்றுநோய் அபாயம் காரணமாக, ஒரு முழு விமானத்திற்கும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், டசின் கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள இடங்களாக கருடா இந்தோனேசியா விமானம், அவுஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் மற்றும் சிட்னியின் மேற்கில் உள்ள ஒரு பாரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு காத்திருப்பு அறை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்