Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஷிலிருந்து பாதியிலேயே பாகிஸ்தானுக்கு திரும்பும் ஷஹீன் அப்ரிடி

பிக் பாஷிலிருந்து பாதியிலேயே பாகிஸ்தானுக்கு திரும்பும் ஷஹீன் அப்ரிடி

31 மார்கழி 2025 புதன் 06:11 | பார்வைகள் : 125


பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக BBL தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக, பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி விளையாடி வருகிறார்.

பிக் பாஷ் தொடரில் முதல் சீசனில் விளையாடிய அப்ரிடிக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது BBL 2025 சீசன் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

ஏனெனில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ணத் தொடரை கருத்தில் கொண்டு அவர் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

ஷஹீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi), "எனக்கு அளவற்ற அன்பையும், ஆதரவையும் அளித்த பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும், ரசிகர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என சமூக ஊடகப் பக்கத்தில் எழுதினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்