Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா! 5-0 என கைப்பற்றி மிரட்டல்

இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா! 5-0 என கைப்பற்றி மிரட்டல்

31 மார்கழி 2025 புதன் 06:11 | பார்வைகள் : 126


இந்திய மகளிர் அணி கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த 5வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இந்திய அணி அணி 175 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 43 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார். கவிஷா, ராஷ்மிகா மற்றும் சமரி அதப்பத்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

ஹாசினி பெரேரா 65 (42) ஓட்டங்களும், இமேஷா துலானி 50 (39) ஓட்டங்களும் எடுத்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்