நெதர்லாந்தில் இரு முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் - கடும் கண்டனம்
31 தை 2026 சனி 13:03 | பார்வைகள் : 712
நெதர்லாந்தில் இரு முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம் அங்கு பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் அந்நாட்டில் இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில், ஒரு காவல்துறை அதிகாரி சமீபத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களைத் தாக்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது.
அதைக் கண்டித்து, வியாழக்கிழமை அன்று "இனவெறி வன்முறைக்கு" எதிராக ஒரு போராட்டம் நடைபெற்றது.
அந்த அதிகாரி ஒரு பெண்ணை தடியால் தாக்கியதுடன், மற்றொரு பெண்ணின் வயிற்றில் உதைத்துள்ளார்.
உட்ரெக்ட்டில் உள்ள ஹூக் கேதரைன் வணிக வளாகத்திற்கு முன்பாக ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு பெண்களைத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதிகாரிகளின் செயபாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிடைக்கக்கூடிய அனைத்து காணொளிகளும் ஆய்வு செய்யப்படும் என்றும், பெண்களில் ஒருவர் ஒரு அதிகாரியை அவமதித்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் கூறினர்.
தனித்தனியாக, இந்த காணொளி இனவெறி உட்பட பலத்த உணர்வுகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அந்த அதிகாரி "நீங்கள் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர்கள் அல்ல" என்பது உட்பட பல இனவெறி கருத்துக்களைத் தெரிவித்தார் என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் பெண்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பொது வெளியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan