Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் மெட்ரோவில் சாதாரண பயணியாக உலகப்புகழ் பெற்ற பிரித்தானிய பாடகி!!

பரிஸ் மெட்ரோவில் சாதாரண பயணியாக உலகப்புகழ் பெற்ற பிரித்தானிய பாடகி!!

31 தை 2026 சனி 08:45 | பார்வைகள் : 1307


பரிஸ் மெட்ரோ 12-இல், உலகப் புகழ்பெற்ற பாடகியும் பிரித்தானிய பாடகியுமான டுவா லிப்பா (Dua Lipa) சாதாரண பயணியைப் போல மெட்ரோவில் பயணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சிவப்பு தொப்பியுடன், தனது துணைவரும் நடிகருமான காலம் டர்னருடன் (Callum Turner) அவர் காணப்பட்டார். இந்த புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்தி, இரசிக்கத்தக்க கருத்துகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிகழ்வை RATP நிறுவனம் “நட்சத்திரங்களின் ஒரு வழி” ("Une ligne de stars") என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. மெட்ரோ கதவுகளில் விரல்களை வைக்க வேண்டாம் என எச்சரிக்கும் முயல் (Serge le lapin) கூட «அவள் என்னைப் பார்த்தாளா?» என்று நகைச்சுவையாக பதிலளித்திருந்தது.

ஒரு சாதாரண மெட்ரோ பயணம் கூட நட்சத்திர தருணமாக மாறியது. Haute couture ஃபேஷன் வாரத்திற்காக பரிஸில் இருக்கும் டுவா லிப்பா, ஷனல் (Chanel) ஃபேஷன் நிகழ்ச்சியிலும் முன்னணி இடத்தில் கலந்துகொண்டார். 

30 வயதான டுவா லிப்பா, உலகின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இன்ஸ்டாகிராமில் அவரை சுமார் 88.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஸ்போட்டிபை (Spotify) தளத்தில் அவரது பாடல்கள் 66 மில்லியனிற்கும் மேற்பட்ட முறை கேட்கப்பட்டுள்ளன. 2024-ல் வெளியான Radical Optimism ஆல்பத்தின் மூலம் உலகளாவிய வெற்றிகரமான இசை சுற்றுப்பயணத்தையும் முடித்துள்ளார்.

img_697daafdbf26c.jpg

வர்த்தக‌ விளம்பரங்கள்