Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

 இந்தியாவில் கின்னஸ் உலக சாதனை படைத்த Samsung

31 தை 2026 சனி 06:56 | பார்வைகள் : 537


Samsung India நிறுவனம், தனது Galaxy S Series ஸ்மார்ட்போன்கள் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான புகைப்பட போட்டி (Photography competition) மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் அதிகபட்ச புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நிகழ்வாக உலக சாதனை பதிவு செய்யப்பட்டது.

“இந்த சாதனை, Galaxy S Series-ன் camera திறனை நிரூபிக்கிறது. இந்தியாவில் உள்ள பயனர்களின் உற்சாகமே எங்கள் வெற்றிக்கு காரணம்” என சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Galaxy S Series ஸ்மார்ட்போன்கள், உயர்தர கமெரா தொழில்நுட்பம், AI அடிப்படையிலான படத் தரம், மற்றும் நவீன புகைப்பட அம்சங்கள் ஆகியவற்றால் பிரபலமாக உள்ளன.

இந்த புகைப்பட இயக்கம், இந்தியாவின் பல நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, பயனர்களின் பங்கேற்பு மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்வு மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த சாதனை சம்சுங் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும், மேலும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Galaxy S Series-க்கு வலுவான நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்