கற்பனையான ஊழல் குற்றச்சாட்டு; முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்
31 தை 2026 சனி 11:12 | பார்வைகள் : 763
இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, யாராவது ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கின்றனரா? கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டே இருக்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் நடந்த தனியார் டிவி நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திறமையான அரசை நடத்துவதால்தான், நாட்டிலேயே யாரும் அடைய முடியாத, 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை, தமிழகத்தில் சா த்தியப்படுத்தி இருக்கிறோம். இந்த வளர்ச்சியை, நாங்கள் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. ஒருபுறம் மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வரும், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு, மறுபுறம் தொலைநோக்கு பார்வையுடன், எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இற்றுப்போன குற்றச்சாட்டு
இதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே, பழைய 'ஸ்கிரிப்ட்'தான். அதில் முதல் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இது எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு.அடுத்தது ஊழல். இது வரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, யாராவது ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கின்றனரா. கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்.
வாஷிங் மெஷினில்
பா.ஜ.,வுடன் இருக்கும் எல்லோரும் ஊழல்வாதிகள்தான். அதிலும், அ.தி.மு.க.,வினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள். கூட்டணியில் இல்லாத நேரத்தில், அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகளை பா.ஜ.,வினர் கூறினர். இப்போது வாஷிங் மெஷினில் வைத்து, அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டனரா? தி.மு.க.,வை ஹிந்து விரோத கட்சி என்று பேசுவர். ஆனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு, தி.மு.க., ஆட்சியில், 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்.
பா.ஜ., வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம், நான் ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டேன். ஆனால், அவர்கள் நாங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார். அதே நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒரு குடும்பம் மட்டுமே பொறுப்பில் உள்ளது. மூத்த அமைச்சர் துரைமுருகன், அதிக ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அவரால் துணை முதல்வராகக் கூட வர முடியவில்லை. தினகரன், அ.தி.மு.க.,வில் இருந்தவர். இப்போது தனிக்கட்சி நடத்துகிறார். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, கூட்டணி வைத்துள்ளோம்.
அச்சத்தில் ஸ்டாலின்
நாங்கள் கூட்டணி அமைக்க முடியாது என, தி.மு.க., நினைத்தது. ஆனால், கூட்டணி அமைத்து விட்டோம். மேலும் சில கட்சிகள் எங்களுடன் வருவர். ஆனால், தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே, பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கையை விட்டு நழுவி விடுமோ என்ற அச்சத்தில், ஸ்டாலின் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். அதே நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒரு குடும்பம் மட்டுமே பொறுப்பில் உள்ளது. மூத்த அமைச்சர் துரைமுருகன், அதிக ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அவரால் துணை முதல்வராகக் கூட வர முடியவில்லை.
கூட்டணி
தினகரன் அ.தி.மு.க.,வில் இருந்தவர். இப்போது தனிக்கட்சி நடத்துகிறார். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, கூட்டணி வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி அமைக்க முடியாது என, தி.மு.க., நினைத்தது. ஆனால், கூட்டணி அமைத்து விட்டோம். மேலும் சில கட்சிகள் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது. ஆனால், தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே, பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கையை விட்டு நழுவி விடுமோ என்ற அச்சத்தில், ஸ்டாலின் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan