Paristamil Navigation Paristamil advert login

இந்தியா ஏ.ஐ., மாநாடு உலக அளவில் வரவேற்பு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

இந்தியா ஏ.ஐ., மாநாடு உலக அளவில் வரவேற்பு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

31 தை 2026 சனி 10:10 | பார்வைகள் : 669


இந்தியா ஏ.ஐ., மாநாடு உலக அளவில் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் கண்காட்சி  நடக்க உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் செய்து வரும் திட்டங்கள் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து மாநாட்டில் விவரிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நிருபர்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்தியா ஏ.ஐ., மாநாடு உலக அளவில் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வாக இது உருவாகி வருகிறது.

பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகள் ஏற்கனவே ஏஐ உள்கட்டமைப்பில் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை இறுதி செய்த பாடத்திட்டங்களை 500 பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஏஐ திறமை மேம்பாடு அதிகரிக்கப்படும்.

இது இந்தத் துறைக்கு ஒரு வலுவான திறமையை உருவாக்கும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்