Paristamil Navigation Paristamil advert login

பாடசாலை அருகே பரபரப்பை ஏற்படுத்திய நபர்! - பெரும்படை பொலிசார் குவிப்பு!!

பாடசாலை அருகே பரபரப்பை ஏற்படுத்திய நபர்! - பெரும்படை பொலிசார் குவிப்பு!!

30 தை 2026 வெள்ளி 16:50 | பார்வைகள் : 297


இன்று ஜனவரி 30,  வெள்ளிக்கிழமை காலை பரிசில் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

16 ஆம் வட்டாரத்தின் Rue de Longchamp வீதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார். உடனடியாக அங்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த சம்பவம் பின்னர் பெரும் பரபரப்பாக மாறியது.

குறித்த நபருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கையில் துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுட்டுவிடுவேன் என மிரட்டிக்கொண்டிருந்தார்.

அதை அடுத்து, அருகே இருந்த பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் வகுப்பறைக்குள் முடக்கப்பட்டனர்.

BRI படையினர் குவிக்கப்பட்டனர். சிலமணிநேர பரபரப்பின் பின்னர் குறித்த நபர் சரணடைந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்