இலங்கையில் திடீரென சரிவடைந்த தங்கத்தின் விலை!
30 தை 2026 வெள்ளி 12:12 | பார்வைகள் : 278
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி,
22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 368,000 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் (29) அது 386,400 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.
இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று 400,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan