எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் xAI இணைவு - ஒன்றிணையும் முக்கிய துறைகள்
30 தை 2026 வெள்ளி 10:49 | பார்வைகள் : 174
எலான் மஸ்க்கின் பிரபலமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட நிறுவனமான xAI ஆகிய இரண்டு நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை அமெரிக்க ஊடகங்கள் இந்த ஆலோசனை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
எலான் மஸ்க்கின் இந்த முடிவு, அவரது பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைவின் மூலம் எலான் மஸ்க்கின் சொத்துக்களை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களின் இணைவு சாத்தியமானால் உருவாக்கப்படும் புதிய நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி, உலகளாவிய இணைய சேவை, சமூக ஊடகம் மற்றும் தரவு(X) மற்றும் செயற்கை நுண்ணறிவான Grok AI ஆகிய முக்கிய துறைகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தங்களுடைய பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக IPO தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
இரு நிறுவனங்களின் இணைவு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan