Paristamil Navigation Paristamil advert login

Crédit Mutuel Arkéa தொழில்நுட்ப கோளாறு: ஆயிரக்கணக்கான தவறான வங்கிப் பரிவர்த்தனைகள்!!

Crédit Mutuel Arkéa தொழில்நுட்ப கோளாறு: ஆயிரக்கணக்கான தவறான வங்கிப் பரிவர்த்தனைகள்!!

30 தை 2026 வெள்ளி 08:01 | பார்வைகள் : 1128


Crédit Mutuel Arkéa வங்கியில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான தவறான வங்கி பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன. ஜனவரி 27 முதல் Caisse d’Épargne, Banque Populaire, Crédit Coopératif மற்றும் Boursorama ஆகிய வங்கிகளின் சில வாடிக்கையாளர்களின் கணக்குகளில், அவர்கள் செய்யாத கட்டணங்களுக்காக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறால், ஏற்கனவே வசூலிக்கப்கப்பட்ட வங்கி அட்டை கட்டணங்களை கணினி அமைப்புகள் மீண்டும் கோரியுள்ளன. இதனால் ஒரே கட்டணம் இருமுறை வசூலிக்கப்பட்டுள்ளது. எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தவறான பரிவர்த்தனைகளின் மொத்தத் தொகை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Crédit Mutuel Arkéa வங்கி, இரண்டு தடவை நடந்த பரிவர்த்தனைகளில் 98% கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கணக்குகளில் பணத்தை மீண்டும் சேர்க்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது மற்றும் அடுத்த சில நாட்களில் அது வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

வர்த்தக‌ விளம்பரங்கள்