போதைப்பொருள் எதிர்ப்பில் மக்ரோன்!!
29 தை 2026 வியாழன் 17:33 | பார்வைகள் : 1746
போதைப்பொருள் கடத்தலை எதிர்க்கும் நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகல் எலிசே அரண்மனையில் ஒரு புதிய கூட்டத்தைக் கூட்டுகிறார் என ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் நிர்வாக மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez), பொது கணக்குகள் அமைச்சர் அமெலி து மொன்சலன் (Amélie de Montchalin), நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மானன் (Gérald Darmanin), மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஜோன்-நோயல் பாரோ ( Jean-Noël Barrot) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது நவம்பர் மாதத்திலிருந்து மக்ரோன் தலைமையில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மூன்றாவது கூட்டமாகும். முதல் கூட்டம் 2025 நவம்பர் 18 அன்று, மார்செய் நகரில் மெஹ்தி கெஸ்ஸாசி (Mehdi Kessaci) கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த புதிய கூட்டத்தில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து, "தேசிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகமான" Pnaco (parquet national anticriminalité organisée) மதிப்பீடு செய்யும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan