Paristamil Navigation Paristamil advert login

பின்வாங்கிய பாகிஸ்தான்! கொழும்பிற்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு..வெளியான தகவல்

 பின்வாங்கிய பாகிஸ்தான்! கொழும்பிற்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு..வெளியான தகவல்

29 தை 2026 வியாழன் 13:24 | பார்வைகள் : 144


டி20 உலகக்கிண்ண புறக்கணிப்பு முடிவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பின்வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வங்காளதேச அணிக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் அணி, டி20 உலகக்கிண்ணத் தொடரை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகின.  
டி20 உலகக்கிண்ணம் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்த செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ண புறக்கணிப்பு அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.

அதாவது, பாகிஸ்தான் அணியின் கொழும்பு பயணத்திற்கான முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் பல வாரங்களாக நீடித்த நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையால் நடத்தப்படும் தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு வலுவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணித்தால், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கிடையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்