Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

 இலங்கையில் ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

29 தை 2026 வியாழன் 11:38 | பார்வைகள் : 171


உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 420,000 ரூபாவாக உள்ளதுடன், 22 கரட் பவுன் ஒன்றின் விலை 386,400 ரூபாவாக உள்ளது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்