Paristamil Navigation Paristamil advert login

சாரதியின் சாதூரியத்தால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்! - மூன்று பொலிசார் கைது!!

சாரதியின் சாதூரியத்தால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்! - மூன்று பொலிசார் கைது!!

29 தை 2026 வியாழன் 11:06 | பார்வைகள் : 1717


பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் இருந்து பாரிய அளவு கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாரதி ஒருவரின் சாதூரியத்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Saint-Ouen-l'Aumône (Val-d'Oise) நகரூடாக யணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை பொலிசாரின் மகிழுந்து ஒன்று தடுத்து நிறுத்தியது. அதில் இருந்து இறங்கிய மூன்று பொலிசார், கனரக வாகன சாரதியை தாக்கத்தொடங்கினர்..

என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளாத சாரதி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், பொலிசார் ஏன் தாக்கினார்கள் எனும் சந்தேகத்துடன், அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தார்.

அதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், அங்கு நின்றிருந்த மூன்று பொலிசார் மீதும் விசாரணைகள் மேற்கொண்டனர்.  அதன்போதே அவர்கள் போலி பொலிசார் என தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் தடுத்து நிறுத்திய கனரக வாகனத்தை சோதனையும் இட்டனர்.

அதன்போது அதில் 244 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டமை தெரியவந்தது.

குறித்த வாகனம் port du Havre துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு இல்-து-பிரான்சுக்குள் வந்ததாகவும், அதன் சாரதிக்கு அதில் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்