இலங்கையில் 4 இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை
28 தை 2026 புதன் 16:52 | பார்வைகள் : 524
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதற்கு இணையாக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று (28) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,250 டொலர் வரை அதிகரித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையில் 10,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
"22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 374,600 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
நேற்று 394,000 ரூபாயாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. R






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan