Paristamil Navigation Paristamil advert login

ஒட்டுசுட்டானில் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்

ஒட்டுசுட்டானில் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்

28 தை 2026 புதன் 16:44 | பார்வைகள் : 570


 

கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் - கரடிப்புலவு கிராமத்தில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மீட்கப்பட்ட இந்த சடலத்தில், தலை பகுதியின் பின்புறத்தில் காயம் காணப்படுவதால் அவர் இனந்தெரியாதவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சடலம் இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், தலையில் ஏற்பட்ட கடும் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட அதிக இரத்தப் போக்கினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்