Paristamil Navigation Paristamil advert login

போன் விற்பனை நிலையத்தில் கொள்ளை! - காவல்துறையினர் அதிரடி!!

போன் விற்பனை நிலையத்தில்  கொள்ளை! - காவல்துறையினர் அதிரடி!!

28 தை 2026 புதன் 14:08 | பார்வைகள் : 322


ஐபோன்கள் விற்பனை நிலையத்தில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக செயற்பட்டு கைது செய்தனர்.


பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் 26 ஜனவரி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. rue de Vaugirard வீதியில் உள்ள 'ஆப்பிள்' நிறுவனத்தின் அனுமதி பெற்ற ஐபோன் விற்பனை நிலையத்தில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொருட்கள் விநியோகம் செய்பவர் போன்று உடையணிந்த நபர் ஒருவர் காலை 10 மணி அளவில் கடைக்குள் நுழைந்து, பெரிய சுத்தியல் ஒன்றினால் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த ஐபோன்களை கொள்ளையிட்டார்.

இக்காட்சிகளை கண்காணிப்பு கமரா மூலம் வெளியே இருந்து பார்வையிட்ட காட்சியறையின் மேலாளர், காவல்துறையினரை எச்சரித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர், விரைவாக சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த நபரைக் கைது செய்தனர்.

கொள்ளையிட்ட ஐர்போன்களின் மொத்த மதிப்பு €77,000 யூரோக்கள் எனவும், அனைத்தும் மீட்கப்பட்டதோடு, கொள்ளையன் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்