Paristamil Navigation Paristamil advert login

ஜூலை 3 வரை SNCF ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆரம்பம்!!

ஜூலை 3 வரை SNCF ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆரம்பம்!!

28 தை 2026 புதன் 13:56 | பார்வைகள் : 1159


SNCF நிறுவனம் இன்று காலை, மார்ச் 30 முதல் ஜூலை 3 வரை நடைபெறும் பயணங்களுக்கு TGV INOUI, OUIGO, TER மற்றும் INTERCITÉS ரயில்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதில் வசந்தகால விடுமுறைகள் மற்றும் மே மாதத்தில் வரும் நீண்ட விடுமுறை நாட்களும் அடங்கும். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், டிக்கெட் விற்பனை 20% உயர்ந்துள்ளதாக SNCF Connect தெரிவித்துள்ளது. முன்பதிவு திறந்ததிலிருந்து SNCF Connect இணையதளமும் செயலியும் அதிக பயனர் வருகையை பதிவு செய்து வருகின்றன. சாதாரண நாளை விட இரட்டிப்பு அளவில் பார்வையாளர்கள் வந்துள்ளதாகவும், குறிப்பாக Ascension விடுமுறை, மே 1 விடுமுறை மற்றும் ஈஸ்டர் வார இறுதி காலங்களுக்கான டிக்கெட்டுகள் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SNCF Connect பயணிகளை முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது. விற்பனை திறக்கும் நேரத்தில் முன்பதிவு செய்தால், சராசரியாக 45% வரை  சேமிக்க முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது. மே மாதத்தில் பல நீண்ட வார இறுதிகள் இருப்பதால், பயண திட்டமிடலை முன்பே செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

மே மாதத்தில் மூன்று நீண்ட வார இறுதிகள் உள்ளன:

  1. மே 1 வெள்ளிக்கிழமை முதல் மே 3 ஞாயிற்றுக்கிழமை வரை,
  2. மே 8 வெள்ளிக்கிழமை முதல் மே 10 ஞாயிற்றுக்கிழமை வரை,
  3. மே 15 வெள்ளிக்கிழமையை விடுப்பாக எடுத்தால், மே 14 வியாழக்கிழமை முதல் மே 17 ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு “சாத்தியமான” நீண்ட வார இறுதி இருப்பதை SNCF நினைவூட்டி உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்