Paristamil Navigation Paristamil advert login

சாய் பல்லவி கிளாமர் உடை அணியாமல் இருப்பதற்கான காரணம் இதுவா?

சாய் பல்லவி கிளாமர் உடை  அணியாமல்  இருப்பதற்கான காரணம்  இதுவா?

28 தை 2026 புதன் 12:45 | பார்வைகள் : 446


மாலிவுட்டில் மலர், கோலிவுட்டில் ஆனந்தி, டோலிவுட்டில் புஜ்ஜி, பாலிவுட்டில் சீதை என சாய் பல்லவியை ரசிகர்கள் பல பெயர்களில் கொண்டாடுகின்றனர். இவர் நேச்சுரல் பியூட்டி எனப் பெயர் பெற்றவர். ஏனெனில், நடிகை சாய் பல்லவி மற்ற நடிகைகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே மேக்கப் பயன்படுத்துகிறார். மேலும், கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் தவிர, குட்டை ஆடைகளை அணிவதில்லை.

குறிப்பாக பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்குச் செல்லும்போது, தன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிந்து செல்கிறார். சேலைகளுக்கே அவர் முன்னுரிமை கொடுக்கிறார். குட்டை ஆடை அணியாத காரணத்தாலேயே சாய் பல்லவியை பலருக்கும் பிடிக்கும். சினிமா உலகில் இது அரிது. தன் உடல் பாகங்கள் தெரியும்படி ஆடை அணியாததற்கு ஒரு காரணம் இருப்பதாக அவரே கூறியுள்ளார்.

கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சம்பவமே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார் சாய் பல்லவி. கல்லூரியில் ஒரு நடனப் போட்டியில் பங்கேற்றபோது, அவர் ஸ்லிட் உடை அணிந்திருந்தார். அவரது நடன வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால், அந்த வீடியோவிற்கு வந்த கமெண்ட்களைப் பார்த்த சாய் பல்லவி அதிர்ச்சியடைந்தார். அது தன் மனதை மிகவும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.

'சிலர் என் திறமையை விட, என் உடல் மீது மட்டுமே ஆர்வம் காட்டினர்' என சாய் பல்லவி கூறினார். இந்த சம்பவம் அவரை மிகவும் காயப்படுத்தியதால், அன்று முதல் கிளாமர் ஆடைகளைத் தவிர்த்தார். தற்போது சாய் பல்லவி கைவசம் பல படங்கள் உள்ளன. யாஷ் மற்றும் ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்கிறார். இதன் மூலம் பான்-இந்தியா நடிகையாக வலம் வரவுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்