சிம்பு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிருணாள் தாக்கூர் ?
28 தை 2026 புதன் 12:36 | பார்வைகள் : 456
அதன்படி மிருணாள் தாக்கூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம் மிருணாள் தாக்கூர். அப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். காட் ஆஃப் லவ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இப்படம் தான் மிருணாள் தாக்கூரின் கோலிவுட் அறிமுகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நடிகை மிருணாள் தாக்கூர் சமீப காலமாக தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவரைப் பற்றிய காதல் வதந்திகள் தான். அவர் நடிகர் தனுஷை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் வருகிற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால் அதைப்பற்றி இருவருமே வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். நடிகர் தனுஷின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
தனுஷுடனான காதல் கிசுகிசுக்கு பின்னர் நடிகை மிருணாள் தாக்கூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளது தற்போது மேலும் பேசு பொருள் ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிப்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இது காதல் சம்பந்தமான படமாக இருக்கும் என கூறப்படுவதால், சிம்புவுக்கும் மிருணாள் தாக்கூருக்கும் இடையே நிறைய ரொமாண்டிக் காட்சிகள் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஜோடிக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan