TGV ரயில்களில் “No Kids” சர்ச்சை: SNCF தலைவர் அதிர்ச்சி!!
28 தை 2026 புதன் 08:11 | பார்வைகள் : 1676
SNCF நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Jean Castex, TGV ரயில்களில் “no kids” (குழந்தைகள் அனுமதிக்கப்படாத) பகுதிகள் குறித்து எழுந்த சர்ச்சையால் தான் “மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.
“எங்கள் ரயில்களில் குழந்தைகள் முழுமையாக வரவேற்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று அவர் லில்-யூரோப் (Lille-Europe) TGV நிலையத்திற்கு சென்றிருந்த போது கூறியுள்ளார்.
அவரது தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் SNCF வலையமைப்பில் 8.4 மில்லியன் குழந்தைகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பை விட பெரிய உயர்வாகும். குடும்பங்களின் எண்ணிக்கையும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மைகள் “no kids” என்ற சர்ச்சைகளுக்கு முற்றிலும் எதிரானவை எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
புதிய Optimum வகுப்பு தொழில்முறை பயணிகளின் தேவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும், 12 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் இல்லாதிருப்பது “புதிதான ஒன்றல்ல” என்றும் SNCF விளக்கி வந்தது. ஏனெனில் “பல ஆண்டுகளாக Business Première வகுப்பில் இதே நடைமுறை இருந்து வருகிறது” என SNCF நினைவூட்டியுள்ளது.
ஆனால் TGV களில் வேறு இடங்களில் குழந்தைகள் இருப்பது எந்த வகையிலும் கேள்விக்குறியாகாது; "குழந்தை பராமரிப்பு (nurseries) பகுதிகளும், குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன” என்றும் Jean Castex விளக்கியுள்ளார். மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல, குடும்பங்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ மட்டுமே ஒதுக்கப்பட்ட தனி வண்டிகளை அறிமுகப்படுத்தும் யோசனையை அவர் நிராகரித்துள்ளார்.
குடும்பங்களின் வசதிகளை மேலும் மேம்படுத்த அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan