Val-d’Oise: சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட காவல்துறை அதிகாரி!!
27 தை 2026 செவ்வாய் 22:20 | பார்வைகள் : 1998
Val-d’Oise மாவட்டத்தின் Éragny பகுதியில், 52 வயதுடைய ஒரு ஜெண்டார்ம் (gendarme) கடந்த திங்கட்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தரையில் படுத்திருந்த நிலையில், அவரது சேவைத்துப்பாக்கி அருகில் இருந்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் வந்தபோது, தலையில் குண்டு பாய்ந்திருந்தது உறுதியாகியுள்ளது. மரணத்தின் காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், அவர் தனது பிஸ்டலை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டாரா என்பதை உறுதிப்படுத்த உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், Val-d’Oise gendarmerie குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்தவர் Pontoise கம்பெனியில் பணியாற்றி வந்தவர்; அங்கு அவர் திறமையானவர், அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த இராணுவ வீரர் எனக் கூறப்படுகிறது. இந்த இழப்பு அவரது சக பணியாளர்களை ஆழமாக பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், உடலை கண்டுபிடித்த சக ஊழியர்களுக்கும் மனஆதரவு வழங்க, gendarmerie பிராந்தியத்திலிருந்து ஒரு உளவியல் நிபுணர் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், தற்கொலை தடுப்புக்கான தேசிய உதவி எண் 3114 மூலம், பொதுமக்கள் 24 மணி நேரமும், இலவசமாக, பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களிடமிருந்து ஆதரவும் வழிகாட்டலையும் பெற முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan