களத்தில் குதிக்கிறது பிரான்ஸ்… அட்லாண்டிக் பெருங்கடலில் விமானதாங்கி கப்பல்!!
27 தை 2026 செவ்வாய் 19:13 | பார்வைகள் : 2098
பிரான்ஸ் வசமுள்ள மிகப்பெரிய விமான தாங்கி கப்பலான சாள்-து-கோல், அட்லாண்டிக் பெருங்கடலில் இறக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்க தன்வசமாக்கும் முயற்சியில் ஈடுபடும் பின்னணியில், வடக்கு அட்லாண்டிக்கில் இந்த கப்பல் இறக்கப்பட்டுள்ளது. ‘பயிற்சி’ நோக்கில் அது வடதுருவத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக ஆயுத அமைச்சகம் அறிவித்தது.
பிரெஞ்சு கடற்படையும், இராணுவமும் கப்பலில் உள்ளதாகவும், வரும் வாரம் முழுவதும் அக்கப்பல் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும் எனவும், வான்வெளி மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துவித தாக்குதல்களையும் முறியடிக்கும் ஆற்றலுடன் குறித்த கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நீர்மூழ்கிகள் எதுவாகினும் அதையும் தகர்க்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாள்-து-கோல் கப்பலை “ஒரு மூலோபாய மற்றும் இராஜதந்திர தொடர்பு கருவியாகவும்” செயற்படுகிறது எனவும் குறிப்பிடப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan