Paristamil Navigation Paristamil advert login

இந்தியா -ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் !

இந்தியா -ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் !

28 தை 2026 புதன் 11:01 | பார்வைகள் : 585


தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருப்பது இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 16வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே உறவை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை நடவடிக்கை, ஏஐ உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்  உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும், உற்பத்தி மற்றும் சேவைகளை மேம்படுத்தும். இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவு  நமது மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பை தரும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்