Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் சசி தரூர்

காங்கிரஸ் கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் சசி தரூர்

28 தை 2026 புதன் 07:55 | பார்வைகள் : 100


அடுத்த வாரம் கூட உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க சோனியா இல்லத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தை சசி தரூர் மீண்டும் புறக்கணித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை சசிதரூர் புறக்கணித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.   கொச்சியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதாலேயே  இந்த கூட்டத்தை சசி தரூர் வேண்டும் என்றே புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வாரம் கூட உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க சோனியா வீட்டில் ஆலோசனை கூட்டம்நடந்தது.  பட்ஜெட் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் சோனியா, மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல், சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி மற்றும் மணிஷ் திவாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த கூட்டத்தில் திருவனந்தபுரம் தொகுதி எம்பியான சசிதரூர் பங்கேற்கவில்லை. தற்போது அவர் துபாயில் நடக்கும் இலக்கியத் திருவிழாவில் உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்