Paristamil Navigation Paristamil advert login

கூட்டணி குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்கவும்; திமுக தலைமை

கூட்டணி குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்கவும்; திமுக தலைமை

28 தை 2026 புதன் 06:22 | பார்வைகள் : 100


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன  

இதனிடையே, திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  

இந்நிலையில், கூட்டணி , தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாக தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக  திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ள அறிவுறுத்தலில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.   
 

வர்த்தக‌ விளம்பரங்கள்