Paristamil Navigation Paristamil advert login

2025-இல் 11.2 சதவீத உயர்வை கண்டுள்ள குடியிருப்பு அனுமதிகள்!!

2025-இல் 11.2 சதவீத உயர்வை கண்டுள்ள குடியிருப்பு அனுமதிகள்!!

27 தை 2026 செவ்வாய் 15:36 | பார்வைகள் : 1580


2025-ஆம் ஆண்டில் பிரான்சில் 3,84,230 முதல் குடியிருப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% உயர்வாகும். 

மாணவர்கள் காரணமாக இந்த அனுமதிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது; மொத்தத்தின் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மனிதாபிமானம், குடும்பம் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. 

Maghreb நாடுகள் (மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா) தொடர்ந்து குடியிருப்பு அனுமதிகள் வழங்கப்படுவதில் முன்னணியில் உள்ளன. இருப்பினும், இந்நாடுகளுக்கான முதல் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது. 

அதே நேரத்தில், மனிதாபிமான காரணங்களால் உக்ரைனியர்கள் மற்றும் ஆப்கானியர்களுக்கான அனுமதிகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் 9,55,080 குடியிருப்பு அனுமதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, 2020-க்கு பிறகு இது உயர்ந்த அளவாகும். இதில் பெரும்பகுதி குடும்ப காரணத்திற்காக வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதி களாகும். ஆனால் ஒழுங்குமுறைப்படுத்தல்கள் சுமார் 28,000 ஆக குறைந்துள்ளன; குறிப்பாக பொருளாதார காரணங்களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல்களில் அதிக சரிவு காணப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்