சமந்தா புதிய பெயர் என்ன தெரியுமா?
27 தை 2026 செவ்வாய் 15:08 | பார்வைகள் : 505
நடிகை சமந்தா தனது பெயரை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரது அடுத்த படத்தின் டைட்டில் கார்டில் சமந்தாவின் புதிய பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை சமந்தா தெலுங்கில் இளம் நடிகராக இருக்கும் நாகசைதன்யாவை திருமணம் முடித்து பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
நாகசைதன்யாவை திருமணம் செய்த போது சமந்தா ரூத் பிரபு என்கிற தனது பெயரை நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியுடன் இணைத்து சமந்தா அக்கினேனி என்று பெயர் வைத்திருந்தார்.
சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோரை சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவரின் பெயரின் அடிப்படையில் தனது பெயரை சமந்தா மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி சமந்தா நிடிமோரு என அவர் பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் சமந்தா தனது பெயரை மாற்றாத நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் மா இன்டி பங்காரம் என்ற படத்துடைய டைட்டில் கார்டில் புதிய பெயர் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan