Paristamil Navigation Paristamil advert login

சமூகவலைத்தளங்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்!!

சமூகவலைத்தளங்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்!!

27 தை 2026 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 1598


சமூகவலைத்தளங்கள் பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருவாரியான ஆதரவு கிட்டியது.

15 வயதுக்கு குறைவான சிறுவர்கள், டிக்டொக், இன்ஸ்டகிராம், ஸ்னப்சட் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கிறது இந்த சட்டம். நேற்று ஜனவரி 26, திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 116 ஆதரவு வாக்குகளும், 23 எதிர் வாக்குகளும் பதிவாகின.

அதேவேளை, இந்த சமூக ஊடகங்களில் பட்டியலில் வேறு எந்த தளங்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை. 2026 ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், புதிய கணக்கு ஆரம்பிக்கும் போதும் சரி, அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்படும் கணக்குகளும் சரி முடக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு சமூகவலைத்தளங்களை பாவிக்க தடை விதிப்பது பல நாடுகளில் பரவலாக நடைமுறைக்கு வந்தவண்ணம் உள்ளன. இறுதியாக கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்