டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களை எமானுவல் மக்ரோன் சந்திக்கிறார்!
27 தை 2026 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 1816
எமானுவல் மக்ரோன், வரும் நாளை புதன்கிழமை மதியம் டென்மார்க் பிரதமர் மெத் பிரெடிக்சன் (Mette Frederiksen) மற்றும் கிரீன்லாந்து பிரதமர் Jens Frederik Nielsen ஆகியோரை சந்திக்க உள்ளதாக எலிசே இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
முக்கியமான சந்திப்பு
அவர்களின் கோரிக்கையின் பேரில்,டென்மார்க் பிரதமர் Mette Frederiksen மற்றும் கிரீன்லாந்து (Groenland) பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன்n (Jens Frederik Nielsen) ஆகியோர் ஜனவரி 28 புதன்கிழமை எலிசே மாளிகையில் எமானுவல் மக்ரோன் அவர்களால் வரவேற்கப்படுவார்கள் என்று எலிசே தெரிவித்துள்ளது.
இந்த வேலை மதிய உணவு எனும் « déjeuner de travail » சந்திப்பில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றின் சுயாட்சி, நிலப்பரப்பு ஒருமைப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒற்றுமைக்கான பிரான்சின் ஆதரவை எமானுவல் மக்ரோன் மீண்டும் வலியுறுத்துவார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் கிரீன்லாந்து நாட்டின் பொருளாதார‑சமூக முன்னேற்றத்திற்கான பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பற்றியும் மூன்று தலைவர்களும் கலந்துரையாடுவார்கள்.
Nuuk நகரில் பிரான்ஸ் தூதரகம் விரைவில் திறப்பு!
டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை இணைத்துக்கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, பிரான்ஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததற்காக Mette Frederiksen மற்றும் Jens Frederik Nielsen இருவரும் பிரான்சுக்கு நன்றி தெரிவிப்பார்கள். இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 15 முதல் 17 வரை, ஆர்க்டிக் சகிப்புத்தன்மை (Opération Endurance Arctique) நடவடிக்கையின் கீழ், பிரான்ஸ் சுமார் பதினைந்து வீரர்களை கிரீன்லாந்து நோக்கி அனுப்பியிருந்தது.
இந்த ஒற்றுமைச் செய்தியை பிரான்ஸ் அடுத்த சில நாட்களில் மேலும் வலுப்படுத்த உள்ளது. ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் நொயல் பரோ (Jean‑Noël Barrot), பிப்ரவரி 6 அன்று திறக்கப்பட உள்ள புதிய பிரான்ஸ் தூதரகத்தை Nuuk நகரில் திறந்து வைக்க உள்ளார்.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களுக்கு, இந்தப் பயணம் ஐரோப்பிய தலைநகரங்களுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாகும். அவர்கள் இந்த பயணத்தை செவ்வாய்க்கிழமை பெர்லினில் ஜெர்மன் சான்சலர் Friedrich Merz உடன் தொடங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தலைவர்களை எமானுவல் மக்ரோன் சந்திக்கிறார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan