Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் சந்திரா புயல் - வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தல்

பிரித்தானியாவில் சந்திரா புயல் - வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தல்

27 தை 2026 செவ்வாய் 07:12 | பார்வைகள் : 690


பிரித்தானியாவின் பல பகுதிகளை சந்திரா என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால் வானிலை ஆராய்ச்சி மையம் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

சந்திரா புயல், பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த காற்றையும், மழையையும் மட்டுமின்றி, பனிப்பொழிவையும் கொண்டுவர இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரித்தானிய ஆற்றல் அமைப்பான British Gas, மூன்று பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்களை அறிவுறுத்தியுள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் டார்ச், உபரி பேட்டரிகள் மற்றும் மொபைலுக்கான பவர் பேங்க் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், பேட்டரி மூலம் இயங்கும் ஒரு ரேடியோ இருக்குமானால், அதை பயன்படுத்தி நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ளலாம் என்றும் British Gas கூறியுள்ளது.

அத்துடன், எளிதில் கெட்டுப்போகாத உணவுகள், போர்வைகள், குறிப்பாக சந்திரா புயலின்போது, மின்சாரம் தடைபடும் என்பதால், ஒளி கொடுக்கவும் மற்றவர்களை தொடர்பு கொள்ளவும் தேவையான விடயங்கள் மீது கவனம் செலுத்துமாறும் British Gas மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்