Paristamil Navigation Paristamil advert login

Apple வெளியிட்ட புதிய மேம்படுத்தப்பட்ட AirTag

 Apple வெளியிட்ட புதிய மேம்படுத்தப்பட்ட AirTag

27 தை 2026 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 204


ஆப்பிள் தனது பிரபலமான AirTag சாதனத்தின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போது இது 50 சதவீதம் அதிக தூரம் (Range) வரை பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது.

மேலும், 50 சதவீதம் அதிக சத்தம் கொண்ட ஸ்பீக்கர் மூலம் பயனர்கள் தங்கள் தேடும் பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

புதிய AirTag, iPhone 17, Apple Watch Ultra 3 போன்ற சாதனங்களில் உள்ள இரண்டாம் தலைமுறை Ultra Wideband chip மூலம் இயக்கப்படுகிறது.

இதன் மூலம், Precision Finding தொழில்நுட்பம் இன்னும் சக்திவாய்ந்ததாகி, பயனர்கள் தங்கள் சாவி, பணப்பை, பைகள் போன்றவற்றை விரைவாக கண்டுபிடிக்க முடியம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், Find My network மூலம், AirTag தொலைவில் இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ள Apple சாதனங்கள் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து உரிமையாளருக்கு தகவல் தருகின்றன.

புதிய Share Item Location வசதி மூலம், பயனர்கள் தங்கள் இழந்த பொருட்களின் இருப்பிடத்தை விமான நிறுவனங்கள் போன்ற நம்பகமான தரப்புகளுடன் பாதுகாப்பாக பகிர முடியும். இதனால், பைகள் தாமதமாக வந்தாலும், 90 சதவீதம் வரை மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புதிய AirTag 85 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் மற்றும் அரிய உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை மாற்றமின்றி, ஒரு AirTag 29 டொலர் மற்றும் நான்கு AirTag 99 டொலர் என கிடைக்கிறது. பயனர்கள் Apple Store-ல் தனிப்பட்ட engraving வசதியையும் இலவசமாக பெறலாம். 

வர்த்தக‌ விளம்பரங்கள்