Paristamil Navigation Paristamil advert login

ரோகித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஶ்ரீ விருது - இந்திய அரசு அறிவிப்பு

 ரோகித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஶ்ரீ விருது - இந்திய அரசு அறிவிப்பு

27 தை 2026 செவ்வாய் 06:34 | பார்வைகள் : 155


இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கவுரவிக்கும் கையில் இந்திய அரசு பத்ம விருதுகளை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது.

இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஶ்ரீ என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்த விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜூக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனிதா ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் பஜனிவேல் ஆகியோருக்கும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்