மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு
27 தை 2026 செவ்வாய் 06:23 | பார்வைகள் : 944
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் மத்திய பகுதியில் குவானாஜீவாடோ மாகாணத்தில் உள்ள உள்ளூர் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
மர்மகும்பல் ஒன்று கால்பந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதனால் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அப்பகுதி மாகாண மேயர் சீசர் பிரிட்டோ கண்டனம் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் எதற்காக நிழ்ந்தது? தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
தாக்குதல் நடத்திய கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan