Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி தயாரிப்பில் நடிக்கும் வி.ஜே. பார்வதி.?

விஜய் சேதுபதி தயாரிப்பில் நடிக்கும் வி.ஜே. பார்வதி.?

26 தை 2026 திங்கள் 14:59 | பார்வைகள் : 211


விஜய் சேதுபதி தயாரிக்கும் வெப் சீரிஸில் வி.ஜே. பார்வதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே பார்வதி தனக்கான ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். 

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று லட்சக்கணக்கானோரின் கவனத்தை பெற்றார் விஜே பார்வதி.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே பார்வதியின் நடவடிக்கை காரணமாக அவருக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான பிக் பாஸ் விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கி அதிரடியாக நீக்கம் செய்தார். இதன் பின்னர் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் பார்வையாளராக அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் விஜே பார்வதி வெப் சீரிஸில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்த தொடரை விஜய் சேதுபதி தயாரிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே விஜய் சேதுபதி தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த தொடரில் விஜே பார்வதி நடிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்