Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன்-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட தயார்- ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன்-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட  தயார்- ஜெலென்ஸ்கி அறிவிப்பு

26 தை 2026 திங்கள் 13:10 | பார்வைகள் : 519


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் கையெழுத்திட 100 சதவீதம் தயாராக உள்ளது என அறிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், லிதுவேனியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜெலென்ஸ்கி கூறியதாவது,

“இந்த ஆவணம் முழுமையாக தயாராகியுள்ளது. கையெழுத்திடும் திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்துவதற்காக எங்கள் கூட்டாளர்களின் பதிலை காத்திருக்கிறோம். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் எங்களுக்கு மிக முக்கியமானது.” என கூறியுள்ளார்.

அவர் மேலும், 2027-க்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதே நாட்டின் “பொருளாதார பாதுகாப்பிறகு உத்தரவாதம்” என கூறியுள்ளார்.

அபுதாபியில் கடந்த வாரம் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில், நிலப்பரப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகள் முக்கிய தடையாக இருந்தன.

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் தன்னுடைய ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், உக்ரைன் தனது நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை காக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

அடிப்படையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்கா இதில் சமரசம் காண முயற்சிக்கிறது என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், உக்ரைனுக்கு அமெரிக்காவின் நேரடி பாதுகாப்பு உறுதி கிடைக்கும். இது ரஷ்யா-உக்ரைன் போரின் தீர்வுக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்