குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி
26 தை 2026 திங்கள் 07:06 | பார்வைகள் : 1178
குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள, உழைப்பாளர் சிலை அருகே, தமிழக அரசு சார்பில், இன்று குடியரசு தின விழா நடை பெற்றது. காலை, 8:00 மணிக்கு, கவர்னர் ரவி தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முப்படைகள், தமிழக போலீசார், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அணிவகுப்பு மற்றும் அரசு துறை அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தமிழக கலைஞர்கள் மற்றும் வெளி மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
பதக்கங்கள்
துறைகளில் சாதனை புரிந்தவர்கள், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் \r\nஉள்ளிட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan