Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

26 தை 2026 திங்கள் 05:38 | பார்வைகள் : 673


பிலிப்பைன்ஸ் தெற்கு பசிலான் மாகாணத்தின் பசிலான் கடற்பகுதியில் 350க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில்  15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

MV Trisha Kerstin 3 எனும் பயணிகள் கப்பல், சாம்போங்கா துறைமுக நகரிலிருந்து புறப்பட்டு தெற்கு சூலு மாகாணத்தின் ஜோலோ தீவுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே  திங்கட்கிழமை (26)  நள்ளிரவு விபத்துக்குள்ளனது.

பிலிப்பைன்ஸ் கடற்துறையினரின்  தகவலின்படி, அந்த கப்பலில்  332 பயணிகளும், 27 பணியாளர்களும் பயணித்துள்ளனர். 
இந்நிலையில் , இதுவரை  316 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 28 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டவர்கள் பசிலான் தலைநகர் இசபெலா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, மிந்தனாவிலிருந்து சீனாவுக்கு சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் கொடி ஏந்திய சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியதில், குறைந்தது இரண்டு பிலிப்பைன்ஸ் கடற்பணியாளர்கள் உயிரிழந்ததுடன், 15 பேர் மீட்கப்பட்டனர். மேலும் நால்வர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்