பிரான்சில் வரப்போகும் முக்கிய தடை! யார் யாருக்கு பாதிப்பு?
26 தை 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 4118
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் ‘பட்ஜெட்’ வாசிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை மற்றுமொரு முக்கிய வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை விதிப்பது தொடர்பில் ஆதரவு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. ஆதரவு வாக்குகள் பதிவாகி சட்டம் நிறைவேற்றப்பட்டுமாக இருந்தால், அடுத்த கல்வியாண்டில் இருந்து அது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
டிக்டொக், ஸ்னப்சட், இன்ஸ்டகிராம் ஆகிய மூன்று சமூகவலைத்தளங்களை தடை செய்யக்கோரும் இந்த சட்டத்தை ANSES எனும் ‘உளநல உடல் ஆரோக்கிய பாதுகப்பு சபை’ நிறைவேற்ற கோரியிருந்தது. இந்த தடையினால் இணையவழி துன்புறுத்தல்களை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த பின்னணியில் இன்று ஜனவரி 26, திங்கட்கிழமை அது வாக்கெடுப்புக்கு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan