Paristamil Navigation Paristamil advert login

Babybio குழந்தை பால்மாக்கள் மீளப்பெறப்படுகின்றன!!!

Babybio குழந்தை பால்மாக்கள் மீளப்பெறப்படுகின்றன!!!

25 தை 2026 ஞாயிறு 20:13 | பார்வைகள் : 571


Babybio நிறுவனத்தின் மூன்று குழந்தை பால்மா தொகுதிகள், “செரியுலைடு” (céréulide) என்ற விஷப்பொருள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக திரும்பப் பெறப்படுகின்றன. 

இந்த தயாரிப்புகள் 2023 செப்டம்பர் முதல் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், அரசு இணையதளம் Rappel Conso-வில் அவற்றை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Babybio நிறுவனம், Vitagermine என்ற உயிரியல் உணவுப் பொருள் குழுவைச் சேர்ந்தது. Nestlé, Danone மற்றும் Lactalis ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு, குழந்தைப் பால்மா தயாரிப்புகளை திரும்பப் பெறும் நான்காவது நிறுவனம் இதுவாகும். 

“Optima” என்ற பெயரில் 400 (un lot) கிராம் மற்றும் 800 கிராம் (deux lots) அளவுகளில் விற்பனை செய்யப்பட்ட இந்த தொகுதிகள், செப்டம்பர் 11 முதல் ஜனவரி 23 வரை சந்தையில் இருந்துள்ளன. செரியுலைடு என்பது Bacillus Cereus என்ற பக்டீரியாவுடன் தொடர்புடைய ஒரு விஷப்பொருள் ஆகும்; இது உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியை ஏற்படுத்தும். 

Nestlé பாலை உட்கொண்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து Bordeaux மற்றும் Angers நகரங்களில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை நேரடி காரணம் நிரூபிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்