Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுக் கடற்படை அதிரடி - இந்தியர் ஒருவருக்கு நடந்தது என்ன?

பிரெஞ்சுக் கடற்படை அதிரடி - இந்தியர் ஒருவருக்கு நடந்தது என்ன?

25 தை 2026 ஞாயிறு 17:39 | பார்வைகள் : 1679


பிரெஞ்சு கடற்படையினரால் இந்திய 'மாலுமி' ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை  "Grinch" என பெயரிடப்பட்ட ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்றை பிரெஞ்சு கடற்படையினர் தடுத்து நிறுத்தி சிறைபிடித்திருந்தனர். அதன் கேப்டன் 58 வயதுடைய  இந்தியர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு, தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் 'நிழலாக' செயற்படுவதாக சந்தேகிக்கப்படும் குறித்த Grinch கப்பல், ரஷ்யாவில் எண்ணையை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த கப்பல் Gulf of Fos  துறைமுகத்துக்கு அருகே நங்கூரமிடப்பட்டுள்ளது. இது Martigues கடற்கரை நகரில் இருந்து 500 கடல் மீற்றர் தொலைவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்