Paristamil Navigation Paristamil advert login

திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய் தான் - செங்கோட்டையன் பேச்சு

திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய் தான் - செங்கோட்டையன் பேச்சு

25 தை 2026 ஞாயிறு 04:53 | பார்வைகள் : 224


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது;  

”இந்தியாவில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்தக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் விஜய். திரைப்படத்தில் மட்டும் விஜய் ஹீரோ அல்ல.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ..

எம்ஜிஆரை பார்த்தேன். நான் 26 வயதிலேயே சட்டசபை எம்எல்ஏ. அப்பொழுது உங்களை போல் தான் நான் இருந்தேன். தமிழகத்தை ஆளப்போகும் வல்லமை விஜய்க்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆரின் புகழ், வரலாறு விஜய்க்கு கிடைத்துள்ளது. ரூ.ஆயிரம் கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ளார். 

திமுககாரர், அதிமுககாரன் என எந்த நபரிடம் கேட்டாலும், எங்கள் வீட்டில் தளபதிக்குத்தான் ஓட்டு என்கிறார்கள். பல தலைவர்களை நான் பார்த்திருக்கிருக்கிறேன். விஜய் வருகைக்கு பிறகு எல்லா கட்சித்தலைவர்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள். நமக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. இனி போலீஸ்காரர்கள் விசில் வைத்திருக்கக்கூடாது எனக்கூறுவார்கள். பஸ்சில் கண்டக்டர்கள் இனி விசில் அடிக்கக்கூடாது என்றும் கூறுவார்கள்.

விஜய்யின் ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யோடு இணைந்தபின் நான் எங்கு சென்றாலும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ஓடி வந்து என்னுடன் செல்பி எடுக்கின்றனர்.  

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக்கொண்டிருப்பவர் காதுகளில் விசில் அடித்தால், அவர் தடுமாறி விடுவார். பேருந்து நிலையத்தில் உள்ள முதியவர் முன்பு விசில் அடித்தால் அவர் தடுமாறி விடுவார். எனவே விசில் அடிப்பதில் கவனம் தேவை.

நீங்கள் கவலைப்பட தேவையில்லை. எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது. திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி விஜய். அவர் முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.”  

 

இவ்வாறு அவர் கூறினார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்